புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதென்பது, இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்யும் மோசடி நடவடிக்கையாகும் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணியினால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசியலமைப்பைத் திருத்தியமைக்கக்கூடிய நிலைமை இருப்பினும், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தோரணையில், இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவே, இந்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.