ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 25 பேர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இப்பட்டியலில், வேலாயுதபிள்ளை தவராசா, அப்துல் வாஹித் அப்துல் சத்தார், சுப்ரமணியம் பரமராஜா, அருணாச்சலம், முத்துகிருஷ்ணன், மெஹமட் ஹுசேன் ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33(2)(உ) பிரிவின் கீழ் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு உள்ள அதிகாரத்துக்கமைய சட்டத்தரணி தொழில்வாண்மையில் சிறப்பு பெற்றவர்கள் மற்றும் தொழில்வாண்மை செயற்பாடுகளில் நேர்மையாகவும், உன்னதமானவர்களுமான சட்டத்தரணிகள் ஜனாதிபதியினால் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.