மலசலகூடத்தை சுத்திகரிக்குமாறு மக்கள் கோரிக்கை!

308 0

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான 2 ஆம் வீதியில் 1969ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொது மலசலகூடம்  தற்போது பாவனைக்குதவாத வண்ணம் உள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கடந்த காலங்களில் அப்பகுதி பற்றை காடாக காணப்பட்டதுடன் தற்போது மஸ்கெலியா பிரதேச சபை பொறுப்பேற்ற பின்னர் பிரதேச சபை தவிசாளரின் பணிப்புரையில் பிரதேச சபை உறுப்பினர் இராஜ்குமார் அப்பகுதியை சுத்தீகரிப்பு செய்தமை குறிப்பிட்ட தக்கது.

ஆனால் இதுவரை அப்பகுதியில் புதிய பொது மலசலகூடம் அமைக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் அப்பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் அவ்வீதியில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

ஆதலால் உரிய அதிகாரிகள் முன்வந்து உடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a comment