அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே அடக்கம் செய்யப்பட்ட சடலங்கள் தோண்டப்படுகின்றன – விமல்

328 0

wimal-weerawansaஅரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான மாபெரும் மக்கள் எழுச்சி கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே அடக்கம் செய்யப்பட்ட சடலங்கள் தோண்டப்படுவதாக கூறிய அவர் நல்லிணக்கம் என்ற பெயரில் நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மஹிந்த ஆதரவு அணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மைத்திரி யுகம் உருவானால் புலி மீண்டும் தலைதூக்கும் என ஜனவரி 8 தேர்தலுக்கு முன் நாம் கூறிய போது யாரும் அதனை ஏற்கவில்லை.

கடந்த 1 வருட காலத்தில் அது உண்மையாகி வருவது குருடனுக்கு கூட விளங்கியிருக்கும்.

அமெரிக்காவுக்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுரேன் சுரேந்திரன் அடங்கலான டயஸ் போரா அங்கத்தவர்களை சந்தித்தார்.

இவர்களுக்கான முழுச் செலவையும் அரசாங்கமே ஏற்றது. மறுபக்கம் யுத்தத்தின் பின்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டு வந்த நல்லுறவை குழப்ப விக்கினேஸ்வரன் முயன்றுவருகிறார்.

சிங்கள மக்களை எதிரியாக பார்க்கும் மனநிலையை ஏற்படுத்த அவர் தயாராகிறார். இதற்கு அரசாங்கம் முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது எனவும் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.