நான் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்ல மாட்டேன் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஐ.தே.க.யின் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கான எதிர்பார்ப்பு உள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட வகையில் எந்தக் கோபமும் இல்லை. கொள்கையளவில் முரண்பாடு உள்ளதுதான். அதற்காக நாம் பேசாமல் இருந்ததில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய கட்சிகளை அமைத்துக் கொண்டு பெருமை பேசியவர்கள் தற்பொழுது பழைமையை நோக்கி மீள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.