சிறீலங்கா கடற்படைத் தளபதிக்கும் அமெரிக்க தளபதிகளுக்குமிடையில் முக்கிய சந்திப்பு

335 0

brigadier-general-c-j-mahoney-1அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்ரகனுக்குச் சென்று சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, அமெரிக்க படைத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அமெரிக்க கடற்படையினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வோசிங்டன் சென்றிருந்த கடற்படைத் தளபதி கடந்த 26ஆம் திகதி பென்ரகன் சென்றிருந்தார்.

அங்கு அவர், ஆசியப் பிராந்தியத்துக்கான அரசியல் –இராணுவ விவகாரப் பிரதிப் பணிப்பாளரான விமானப்படை மேஜர் ஜெனரல் ஜோன் ரி குயின்டசைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மேலும், அமெரிக்க கடற்படையின் ஈரூடக படைப்பிரிவின் மூலோபாய மற்றும் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜெனரல் மகோனி, நடவடிக்கை, திட்டங்கள் மற்றும் மூலோபாயங்களுக்கான கடல் நடவடிக்கை பிரதித் தலைவர் வைஸ் அட்மிரல் ஜோன் சி அகியூலினோ ஆகியோரையும் சிறிலங்கா கடற்படைத் தளபதி சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.

இந்தப் பேச்சுக்களில், பயிற்சி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், கப்பல்கள் துறைமுகங்களுக்கு வருகைதரல், சிறீலங்காப் படைப்பிரிவில் ஈரூடகப் படைப்பிரிவை உருவாக்குதல் உட்பட பல விடயங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடாத்தப்பட்டுள்ளது.