கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட முரசுமோட்டைக் கிராமத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளது
ஐயன்கோவில், சேற்றுக்கண்டி,இரண்டாம் யுனிற், ஊரியான் ஆகிய பகுதிகளில் வைத்து இவ் விற்பனை நடைபெறுகின்றது சிறு பொலித்தீன் பைகளில் தயார் செய்யப்பட்டு வீடுகைளும் வீதிகளிலும் வைத்து விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
கடந்த காலங்களில் கசிப்பு உற்பத்தி நடைபெற்று வந்தாலும் இதனை அதிகாரிகள் ,பொலிஸார் கண்டு கொள்ளாமையால் , தற்போது கசிப்பு விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
இதன் காரணமாக குடும்பப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
மேற்படி குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கசிப்பு விற்பனை மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் என்பவற்றை முற்றாக ஒழிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.