பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண உதவி வழங்க பணிப்புரை!

2109 21

வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாடசாலை சீருடை மற்றும் சப்பாத்துக்கள் என்பவற்றுக்கான வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

Leave a comment