வாய்மூடி மௌனமாக இருப்பதற்காகத்தான் எதிர்கட்சித்தலைவர் பதவி – சிவசக்தி

312 0

எதிர்கட்சித்தலைவர் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஐயாவிற்கும் இடையில் ஒரு போட்டி இருந்திருந்தது இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டபோது,நிச்சயமாக நான் நினைக்கின்றேன் தெற்கில் ஏற்பட்டிருகின்ற இந்த 50நாட்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்தப் போட்டியானது தென் பகுதியினுடைய ஒரு அதிகாரப்போட்டி இந்த அதிகாரப் போட்டியில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை முன்னிறுத்தாமல் வெறுமனமே ஜனநாயக உரிமை மீறப்பட்டிருக்கின்றது.

இன்று எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய பதவிக்காக தனியாக நின்று தான் போராடுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

எங்களைப் பொறுத்தவரையில் எதிர்கட்சித்தலைவர் என்பது இந்த நாட்டிலே ஜனாதிபதி பிரதமர் அதற்கு அடுத்த நிலையில் இருக்கின்றதுதான் இந்த எதிர்கட்சித்தலைவர் இந்த மூன்றரை வருடம் எதிர்க்கட்சித்தலைவர் என்கின்ற பதவியை வைத்துக்கொண்டு பத்துவருடமாக காணாமல் போனவர்கள் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் அல்லது இல்லை என்ற ஒரு பதிலைப் பெற்றுக்கொடுக்க முடியாதளவிற்குத்தான் இந்த நாட்டினுடைய எதிர்க்கட்சித்தலைவர் என்பவர் தமிழ் மக்களுடைய பிரச்சினையை ஜ.நா மனித உரிமைப் பேரவைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக வாய்மூடி மௌனியாக இருப்பதற்காகத்தான் எதிர்கட்சித்தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. 

இதனால் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை இவ்வாறு இன்று வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment