மீனவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – பொன்.ராதாகிருஸ்ணன்

318 0

481821122தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என, இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் கூறினார்.

மதுரையில் வைத்து செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார்.

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இலங்கை அரசு அந்நாட்டு கடற்படைக்கு அறிவுறுத்த வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.