சிறீலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன காவல்துறையினருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்திருந்தார்.
வீதிப் போக்குவரத்துக்களில் தனியார் பேருந்துகள் ஈடுபடும் வேளைகளில் காவல்துறையினரின் நடவடிக்கை குறித்தே அவர் குறித்த முறைப்பாட்டைப் பதிவுசெய்திருந்தார்.
அவரது முறைப்பாடு இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த முறப்பாட்டில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கும், சிறீலங்கா போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றும் பிரதி காவல்துறைமா அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.