யாழில் 58 மதுபான சாலைகளில் 26 பாடசாலை, ஆலயங்களுக்கு அருகில் சட்டவிரோமாக அமைப்பு

374 0

12-1447304112-tasmac-in-tn-600யாழ்.மாவட்டத்தில் மருதங்கேணி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், வேலணை பிரதேச செயர் பிரிவுகளை தவிர்ந்த ஏனை 9 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 58 மதுபான சாலைகள் உள்ளன.
இவற்றில் அதிகப்படியாக யாழ்.பிரதேச செயலர் பிரிவில் 21 மதுபான சாலைகளும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 10 மதுபான சாலைகளும் கரவெட்டி, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 மதுபான சாலைகளும், உடுவில், கோப்பாய், சாவகச்சேரி போன்ற பிரசேத செயலர் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 மதுபான சாலைகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயர் பிரிவில் 3 மதுபான சாலைகளும், சங்காணை பிரதேச செயலர் பிரிவில் 2 மதுபான சாலைகளும் உள்ளன.
இவற்றில் பாடசாலைகள், ஆலையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது மக்கள் குடிமனைகளுக்கு 100 மீற்றர் தூரத்திற்கு உள்ளே 10 மதுபான சாலைகள் அமைந்துள்ளன. இதில் யாழ்.பிரதேச செலர் பிரிவில் 5 மதுபான சாலைகளும், நல்லூர் மற்றும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவு ஒவ்வொன்றிலும் தலா 2 மதுபான சாலைகளும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒரு மதுபான சாலையும் உள்ளன.
இவ்வாறு 100 மீற்றர் தூரத்திற்கு உள்ளே காணப்படும் மதுபான சாலைகளில் 8 மதுபானங்களை நுகர்வதற்கு வழங்கப்படும் மதுபான சாலைகளாக காணப்படுகின்றன.
இதே போன்று குறிப்பாக பாடசாலைகள், ஆலயங்களுக்கு 200 மீற்றர் தூரத்தில் 16 மதுபான சாலைகளும், 300 மீற்றர் தூரத்தில் 18 மதுபான சாலைகளும், 4 மீற்றர் தூரத்தில் 18 மதுபான சாலைகளும், 5 மீற்றர் தூரத்தில் 16 மதுபான சாலைகளும் அமைந்துள்ளன.
பெரும்பாலும் யாழ்.மாவட்டத்தில் உள்ள 58 மதுபான சாலைகளில் 19 மதுபான சாலைகள் தொடர்பான அதிகளவு முறைப்பாடுகளும் பொது மக்களாலும், பொது அமைப்புக்களினாலும் யாழ்.மாவட்டச் செயலகத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.