தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருந்து கைத்தொலைபேசியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞனொருவர் தவறி நீர் நிரம்பிய குளிக்குள் விழுந்து காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்லந்த தியலும நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற 29 வயதான இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.