குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட 22 வயதான சந்தேகநபரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.