நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையர் தகவல்

449 0

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள் ளது. எனவே அனைத்து தேர்தல் அலுவலர்களும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.
மேலும் கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் டெபாசிட் பணம் கட்டியிருந்தனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் பணத்தை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் சில பகுதிகளில் வேட்பாளர்களுக்கு டெபாசிட் பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை. அதனால் அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். எனவே டெபாசிட் பணம் செலுத்திய அனைத்து வேட்பாளர்களுக்கும் உடனடியாக பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Leave a comment