பாடசாலை சேவையிலுள்ள வாகனங்களின் கட்டண குறைப்புக்கு நடவடிக்கை

263 0

எரிபொருள் விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் மல்சிறி த சில்வா தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கான டயர் மற்றும் உதிரிப் பாகங்கள் என்பவற்றுக்கான விலைகள் அதிகரித்துள்ளன. இருந்த போதிலும் அண்மைக் காலமாக குறைவடைந்துள்ள எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு கட்டண குறைப்பை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment