கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை சட்டத்தை அமுலாக்கும் பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
சந்தேகநபர் பாணந்துறை பிரதேசத்தில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 45,000 ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாகவும், களுத்துறை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகநபர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.