தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்

438 0

செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன், மெழுகுதிரியாக தன்னை உருக்கி, தமிழினத்தின் ஒளி விளக்காக மாறிய நாள்.

munchen10

பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்து போகாது. தங்கள் கண்களுக்கு முன்னே தங்களுக்காக ஒருவன் தன்னுயிரை அணு அணுவாக மாய்த்ததை எவராலும் மறக்க முடியுமா? இல்லையே!

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாட்களை Berlin , Hannover , München ,Stuttgart ஆகிய நகரங்களில் நினைவேந்தல் ,சிறப்பு வழிபாடு, கவனயீர்ப்பு மற்றும் அடையாள உணவுதவிர்ப்பு என பல்வேறு வகையான நிகழ்வுகளாக முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் ஏனைய நாட்களிலும் நகரங்கள் தோறும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

munchen11 munchen8 munchen7 munchen6 img_0417 munchen munchen1 munchen4 munchen5 berlin3 img_0410 img_0411 berlin4 berlin5 img_0412 img_0413-kopie berlin6 hannover img_0415 berlin