நெடுந்தீவு பகுதியின் பாதுகாக்கப்பட்டுவரும் குதிரைகள் மர்மமான முறையில் கடத்தப்பட்டு வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அங்கிருந்து கடத்தப்படும் குதிரைகள் வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்கு மறைந்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள காங்கேசன்துறை பகுதியில் அங்கிருந்து கடத்தப்பட்ட குதிரைகள் மறைந்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் ஊடாகவே இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணப்படும் குதிரைகளில் உள்ள குறிகளை வைத்து அவை நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ளவர்களின் குதிரைகள் என்றும், அதில் சில குதிரைகள் ரேஸ் ஓட்டத்திற்காக (பந்தைய ஓட்டம்) பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த குதிரைகள் நெடுந்தீவில் உள்ள கடற்படையினருடைய உதவியுடன் கடத்தப்பட்டு, வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.
இது போன்று கடந்த காலங்களில் அங்குள்ள கடற்படையினருடைய உதவியுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் குதிரையினை கடத்திச் செல்ல முற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நெடுந்தீவில் உள்ள குதிரைகள் தற்போது அருகி வருகின்ற நிலையில், அங்குள்ள கடற்படையினர் குதிரைகளை கடத்தி இராணுவத்தினருக்கு வழங்கும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.