அமைச்சரவை விபரங்கள்

305 0

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், ஜனாதிபதி குறித்த அமைச்சுப்புபொறுப்புக்களை ஒவ்வொருவராக தனது உத்தியோகபூர்வ செயலகத்திற்கு அழைத்து பதவிப்பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 29 அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அதன்படி தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சராக ஹரீன் பெர்னாண்டோவும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக ரவூப் ஹக்கீமும், வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சராக சஜித் பிரேமதாஸவும், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சராக மங்கள சமரவீரவும் ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சராக ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சராக சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சராக மங்கள சமரவீர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மின்சக்தி எரிபொருள் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சராக ரவி கருநாணாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள் குடியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சுற்றுலாத்துறை மற்றும் வன ஜீவராசிகள் கிறிஸ்தவ விவகார அமைச்சராக ஜோன் அமரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Leave a comment