பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான என்.டீ.யு. பிரியங்கர முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.என். குருகே பிரதமர் பாதுகாப்பு பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாரென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பொலிஸ் விசேட அறிவிப்பு பொலிஸ்மா அதிபரின் கையெழுத்துடன் இன்று வெளியிடப்படவுள்ளது.