றம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 05 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 இளைஞர்கள் நேற்று இரவு இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
குறித்த கைதிகள் பொலிஸ் நிலைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு கைதியை பிணையில் விடுதலை செய்ய விளக்கமறியல் பூட்டை திறந்த போது இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
றம்புக்களை பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்காக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.