ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

311 0

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் 
ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட 
ஸ்ரீலங்கா கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும் இரண்டரை மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த காலம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அந்தக் காலம் பெப்ரவரி 15ம் திகதிவரை மீண்டும் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு 2018 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது. 

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்துள்ளதுடன், விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

Leave a comment