இலங்கை கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது இலங்கை கடற்படையிளரால் கைப்பற்றப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான மீன் பிடி வள்ளங்கன் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வள்ளங்கள் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், இந்திய கடற்படையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மீன் பிடி நடவடிக்கையில் 2015, 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது கைப்பற்றப்பட்ட 7 வள்ளங்களே இவ்வாறு ஒப்படைக்கட்டுள்ளன.