விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கொழும்பு, புறக்கொட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை புறக்கோட்டை, கைசர் வீதி பிரதேசத்தில் வைத்து, பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்திய சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றத்தில் 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.