சட்டமொழுங்கு – ஊடக அமைச்சுக்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்போவதில்லை- அகிலவிராஜ்

283 0

சட்டமொழுங்கு அமைச்சையும் ஊடக அமைச்சையும் எந்த காரணத்திற்காகவும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்போவதில்லை என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் இந்த இரு அமைச்சுக்களையும் வழங்கினால் அரசமைப்பு நெருக்கடி உருவாவதை தவிர்க்க முடியாமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

19வது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியினால் பாதுகாப்பு ,மகாவலி  அபிவிருத்தி மற்றும் சூழல் ஆகிய அமைச்சுகளையே தன்வசம் வைத்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மேலதிக பிரச்சினை உருவாகும் என்பதால் நாங்கள் மேலதிக அமைச்சுக்களை வழங்கதயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஐக்கியதேசிய முன்னணி தேசிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ற்கும் அதிகமானதாக அதிகரிப்பதற்கு முயல்கின்றது என ஊடகங்களில் வெளியான தகவல்களையும் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் நிராகரித்துள்ளார்.


நாங்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து  முற்றாக ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தையே அமைக்க எண்ணியுள்ளோம் என குறிப்பிட்டுள்ள அகிலவிராஜ் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தி;ட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment