சீனாவின் புயல் தாக்கம்

390 0

roanu_2863614fசீனாவின் புயூஜியான் மாகாணத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலான புயல் தாக்கியுள்ளது.

இதன்போது நான்கு பேர் பலியானதுடன், பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் வசித்துவந்த ஒருலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நேற்று பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் கடற்றொழிளில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட சுமார் 31 ஆயிரம் படகுகள் உடனடியாக கரைக்கு திரும்பி வருமாறு எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று மாலைமுதல் பியூஜியானில் இருந்து புறப்பட்டு செல்லும் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.