சார்க் மாநாட்டில் நரேந்திர மோடி கலந்துகொள்ளமாட்டார்.

344 0

modi34-5998-27-1474999510எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைப்பெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்;துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியானவுடன் மேலும் 3 சார்க் உறுப்பு நாடுகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளன.

இந்த மாதத்தில் பாகிஸ்தானிய துருப்பினர்கள் இந்திய நிலப்பரப்பினுள் நுழைந்து, இந்திய படையினர் 18 பேரினை கொன்றுள்ள நிலையில், அந்த சம்பவத்துக்கு எதிர்ப்வு தெரிவிக்கம் வகையிலேயே, இந்திய பிரதமர் பாகிஸ்தான் செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரின் இந்த நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் சர்வதேச ரீதியாக தனிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திட்டமிட்டபடி சார்க் மாநாட்டில் நடத்த வேண்டுமானால் பிரிதொரு சார்க் உறுப்பு நாட்டில் இந்த மாநாட்டை நடத்த வேண்டி உள்ளது.

இதேவேளை, இந்திய தாக்குதலின் பின்னனியில் செயற்பட்ட இருவர் தாம்மால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிய தூதுவர், இந்திய வெளிவிவகார அமைச்சிக்கு அழைக்கப்பட்டு இந்தியா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.