2020 ஆம் ஆண்டில் ஜே வி பியின் அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போத அவர் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பில் சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கூட்டமைப்பொன்று உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.