ஆசிரியைக்கு நட்டஈடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

318 0

colombo-supreme-court2மகாநாம பாடசலையின் ஆசிரியை ஒருவருக்கு நட்ட ஈடு வழங்குமாறு, அதே பாடசலையின் முன்னாள் அதிபருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குற்றத்திற்காக குறித்த ஆசிரியை பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

அதற்கு எதிராக குறித்த ஆசிரியை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த ஆசிரியையையின் இடைநிறுத்தத்திற்கு காரணமான அதிபரும் ஆசிரியரும் தலா ஒரு லட்சம் வீதம் நட்ட ஈட்டை செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.