சுதந்திர முன்னணியின் ஜயந்த சமரவீர கைது

315 0

adsasd1ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நிதிமோசடி தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த அரசாங்க காலப்பகுதியின் போது ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க இன்று காலை அவர், நிதிமோசடி எதிர் காவல்துறைப்பிரிவுக்கு சென்றிருந்த வேளை கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், கொழும்பு கோட்டை நீதாவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட அவரை, எதிர்வரும் ஓக்டோபர் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.