தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தின் அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்தல்

342 0

maithripala-sirisena-2தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச தகவல் அறியும் தினம்’ தொடர்பில் இன்று கொழும்பில் ஆரம்பமான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இந்தநிலையில், கடந்த கால அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படாத தகவல் அறியும் சட்ட மூலத்தை தற்போதை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரச செலவினங்களுக்காக பொதுமக்களின் நிதி பயன்படுத்தப்படுகின்றது.

இதன்போது முறைகேடான பயன்பாடுகள் மற்றும் தவறான நிதி முகாமைத்துவம் காரணமாக நாட்டு மக்களுக்கு அநீதி மற்றும் நாட்டின் முன்நோக்கிய பயணத்துக்கு தடைகளும் ஏற்படுகின்றன.

இந்தநிலையில், அது தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்தப்படுத்துவதன் ஊடாக இவ்வாறான முறைக்கேடுகள் நீங்கிவிடும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.