ஜனாதிபதியின் வாள் அரசாங்கத்தை நோக்கியே இருக்கப்போகின்றது. அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நினைத்த பிரகாரம் ஆட்சிசெய்ய முடியாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அதனால் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சிக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கினாலும் கடந்த காலங்கள் போல் அவர்களுக்கு செயற்படமுடியாது. அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி எதிராக இருக்கும்போது எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு நாங்களும் கடும் போராட்டங்களை மேற்கொள்வோம்.
அத்துடன் அரசியல் ரீதியில் ஜனாதிபதி நிர்க்கதியான நிலைக்கு ஆளாகக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். எனவே ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்தாலும் ஜனாதிபதியின் வாள் அரசாங்கத்தை நோக்கியே இருக்கிப்போகின்றது. அதனால் ஐக்கிய தேசிய கட்சி நினைத்த பிரகாரம் செயற்பட ஜனாதிபதி இடமளிக்கமாட்டார் என்றார்.