மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் – ரணில்

318 0

நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக இரத்து செய்யவும், அரசியலமைப்பில் காணப்படுகின்ற குறைபாடுகளை திருத்திக் கொள்ளத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவினை மக்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதே நிலையான ஜனநாயகத்தை செயற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய  கட்சியினர் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுத்த நீதிக்கான போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய முன்னணியாக இதுரை காலமும் செயற்பட்ட நாங்கள்  எதிர்கால  சவால்களை வெற்றிக் கொள்ள ஜனநாயக தேசிய முன்னணியாக செயற்படவுள்ளோம்.இதனை ஒரு அரசியல்  கூட்டணியாக பதிவு  செய்ய உள்ளோம்.

பாரிய  போராட்டத்தின் மத்தியில் தற்போது மீண்டும் அதிகாரத்தை பெற்றுள்ளோம். மக்கள்  எதிர்பார்த்த  கடந்த  காலத்தில் தவறவிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் முழுமைப்படுத்தப்படும். எமக்கு  இடைப்பட்ட காலத்தில் முக்கியமாக நடத்தப்பட வேண்டிய இரண்டு  பிரதான தேர்தல்கள் காணப்படுகின்றது.

எனவே ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் பாரளுமன்ற தேர்தலிலே பல விடயங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

Leave a comment