வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் ரீதியில் கோஷங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளமையானது, எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வடக்கில் அண்மையில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இனவாதத்தை தூண்டக் கூடிய செயற்பாடுகள், சிறுபான்மை மக்களுக்கான வாய்ப்புக்கள் கைநழுவச் செய்யும்.
இதனிடையே தெற்கில் வாழும் சிறுபான்மை மக்கள் மீது, பெரும்பான்மை மக்கள் இனவாதத்தை பிரயோகிக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் சிந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.