புத்தளம் கருவெலகஸ்வெவ பகுதிக்குட்பட்ட தப்போவ பகுதியில் மரத்தின் கீழ் நின்றவரொருவர் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளார்.
புத்தளம் கருவெலகஸ்வெவ பகுதிக்குட்பட்ட தப்போவ நீர்ப்பாசத் திணைக்களத்தில் பணிபுரியும் 58 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீர்ப்பாசத் திணைக்களத்தில் பணிபுரியும் வேலையாட்களிடம் பணிபுரியுமாறு கூறிவிட்டு மரத்தின் நிழலில் இருந்து வேலையாட்களை கண்காணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கருவெலகஸ்வெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் தப்போவ தேனுவர பகுதியைச் சேரந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கருவெலகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.