நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையில் நடந்தேறியுள்ள அரசியல் மாற்றங்களை வரவேற்கின்றோம். இனிவரும் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடனும், மக்களுடனும் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடர்நதும் முன்னெடுப்போம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மைக் காலமாக தொடர்ந்து வந்த அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் அவதானம் செலுத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமையைத் தொடர்ந்து நேற்று ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிலையிலேயே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.