அரசாங்கத்தில் இணையவுள்ள SLFP உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு

293 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள எந்தவொருவருக்கும் தனது சொந்த கருத்தின் அடிப்படையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து கொள்பவர்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவிகள் கிடைக்க மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போஷகராகவிருந்தவரும், அக்கட்சியினால் ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான மஹிந்த ராஜபக்ஷ பிரிதொரு அரசியல் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டுள்ளார். கட்சி மாறியுள்ளவருக்கே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இதுவரை எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், அதே கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க இணைந்து கொள்ளும் ஒருவருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது நீதியானதா ? என்பது ஒரு கட்சித் தொண்டனிடம் எழும் நியாயமான கேள்வியாகும்.

Leave a comment