மாணவர் சமுதாயத்துக்கு, சமகாலத்தில் தகவல் தொழிநுட்பமும் தாய் மொழி உட்பட சர்வதேச மொழித் தேர்ச்சியும் இன்றியமையாதவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
தற்போதைய நவீன தொழிநுட்ப யுகத்தில் பல சாதனைகளை இலகுவாக அடையக் கூடியதாகவுள்ளது.
எனினும் பட்டதாரிகள் தற்போதும் ‘வேலையற்ற பட்டதாரிகள்’ என்ற பதத்தோடு வீதியில் இறங்கி போராடி, அரச வேலை பெறுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றார்.
இது இலங்கையின் கல்வித் திட்டத்திலுள்ள குறைபாடே ஆகும்.
இந்தநிலையில் சிறந்த மொழியாற்றலும், தொழினுட்ப அறிவும் இருந்தால் இந்த தொழினுட்ப யுகத்தில் வேலைவாய்ப்பிற்கோ, வருமானம் ஈட்டுவதற்கோ அஞ்ச வேண்டிய தேவை இருக்காது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்;பிட்டார்.