உலககோப்பை ஹாக்கி – பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்

306 0

உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம் அணி. 

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் 8 – 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் வெண்கலம் வென்றது.
இந்நிலையில், உலககோப்பையை வெல்லப் போகும் அணிக்கான போட்டியில் நெதர்லாந்தும், பெல்ஜியமும் மோதின.
இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின. இதனால் முதல் பாதி மட்டுமின்றி ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இதையடுத்து, இந்த தொடரில் இரண்டாவது முறையாக பெனால்டி ஷுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் பெல்ஜியம் அணி என்ற 3 – 2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி உலககோப்பையை வென்றது.
உலககோப்பை இறுதிப்போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து அமர்ந்து கண்டுகளித்தார்.

Leave a comment