சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக என தெரிவித்தார்.
சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், என் வாழ்வில் இன்று மறக்கமுடியாத நாள். இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரிப்புடன் இருக்கிறேன். இந்த வேளையில் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?
வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.
தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.
கஜா புயல் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளை பிரதமர் மோடி பார்க்க வரவில்லை. சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி. தமிழகம் என்றால் அவ்வளவு அலட்சியமா? எனவே அவரை வீழ்த்துவதற்கு 21 கட்சிகள் இணைந்திருக்கின்றன.
ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக என குறிப்பிட்டார்.