யோசித்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல மேல்நீதிமன்றம் அனுமதி

341 0

jositha-gfaaயோசித்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் ஹோமாகம நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்சவின் கடவுசீட்டை அவரிடம் கையளிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

உடல் உபாதை ஒன்றுக்காக அவுஸ்திரேலியாவில் சிகிச்சை பெறும் நோக்கில் ஒரு மாதகாலத்துக்கு அங்கு செல்வதற்கான அனுமதியை யோசித்த ராஜபக்ச நீதிமன்றத்தில் கோரியிருந்தார்; என்பது குறிப்பிடத்தக்கது.