மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர்

289 0

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை 6 மணியில் இருந்து கடல் நீர் கிராமங்களுக்குள் சென்று கொண்டிருந்த போதும்,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும், சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம்,சௌத்பார்,எமில் நகர், ஜிம்ரோன் நகர், ஜீவபுரம், பனங்கட்டிக்கோட்டு கிழக்கு,மேற்கு ஆகிய கிராமங்களினுள் இன்று காலை முதல் கடல் நீர் படிப்படியாக கிராமங்களுக்குள் செல்ல ஆரம்பித்துள்ளது.பல வீடுகளும் கடல் நீரினால் சூழ்ந்துள்ளது.

மன்னார் புதையிரத வீதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஊடாகவே கடல் நீர் கிராமங்களுக்குள் செல்ல ஆரம்பித்துள்ளது.குறித்த விடையம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் கிராம அலுவலகர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.எனினும் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும்,கடல் நீர் வருவதை கட்டு படுத்தாது விட்டால் குறித்த கிராமங்களில் உள்ள வீடுகள் அனைத்தும் கடல் நீரால் சூழ்ந்து கொள்ளப்படும் அபாய நிலை ஏற்படும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்பை ஏற்படுத்திய போதும் பதில் கிடைக்கவில்லை.எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment