பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பில் அரசாங்கமொன்று அமைக்கப்பட்டதன் பின்னரே தீர்மானிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் யார் என்பதனை சபாநாயகர் முறையாக தீர்மானம் எடுப்பார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் எதிர்க் கட்சித் தலைமைப் பதவி குறித்து பரவலாக பேசப்படுகின்றது. இது தொடர்பில் நேற்று (15) அலரிமாளிகையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.