ய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற சிரேஷ்ட நீதிபதிகள் ஆகியோரின் ஆலோசனையின்படியே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்ததாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாம் உயர் நீதிமன்ற தீர்ப்பையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அவை பிழையான தீர்ப்பு என்றே நாம் கருதுகின்றோம். இரண்டு மாத காலப்பகுதிக்குள் இந்த நீதிமன்ற தீர்ப்புக்கள் இரண்டும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நீதிமன்ற தீர்ப்புக்கள் இரண்டும் வெளியானதன் பின்னர், நாட்டு மக்களுக்கு நெருக்கடியைக் கொடுக்காமல் நாம் ஜனாதிபதியிடம் சென்று பதவியிலிருந்து விலக உடன்பாட்டுக்கு வந்தோம்.
எது எப்படிப் போனாலும், இறுதியாக நாம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே ஏற்க வேண்டியுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.