சம்பூர் அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் வேலைத்திட்டம் கைவிடப்பட்டமையானது, இந்தியா இலங்கையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள முதலீடுகளில் தாக்கம் செலுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்தியாவின் வர்த்தகத்துறை ராஜாங்க அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்று தினங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அவர், பிரதமர் மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்திருந்தார்.
இதன்போது இலங்கை – இந்திய பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நிலக்கரி மின்னுற்பத்தி முறைமையில் இருந்து நவீன மின்னுற்பத்தி முறைமைகளுக்கு மாற வேண்டிய இலங்கையின் தேவை குறித்து அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.