எதிர்க்கட்சியின் கடமைகளை செய்துகொண்டு எதிர்வரும் காலத்தில் விரைவாக தேர்தல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
04 வருடங்களாக அரசாங்கம் அமைத்தும் செய்ய முடியாது போன பொருளாதார நிவாரணத்தை மிகவும் குறுகிய காலத்தில் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முடிந்ததாக அவர் கூறினார்.
அதேநேரம் பாராளுமன்றத்தில் காணப்பட்ட மிகவும் பயங்கரமான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களின் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொள்வதற்காக முடிந்தளவு முயற்சி செய்வதாக ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார்.