பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரண நகரத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து அவர்கள் கப்பம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது சுமார் 01 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
புளத்சிங்கள மற்றும் ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 50 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன், ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.