கடந்த காலங்களில் இலங்கையானது தோல்வி அடைந்த நாடாகவும், சர்வதேசத்தின் தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், ஊழல், குடும்ப ஆட்சி, பயங்கரவாதம் என்பன ஆட்சி செய்யும் நாடாகவும் இருந்து வந்தது. சட்டத்தின் ஆட்சிப்படுத்தல் இருக்கவில்லை. ஜனநாயகம் குறித்து பேச முடிந்திருக்கவில்லை. இவ்வாறான நிலைமையை மாற்றியமைத்தது என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பில் ஆரம்பமான தகவலறியும் உரிமை தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.