உலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை

345 0

201609281129393319_birth-of-3-parent-baby-a-success-for-controversial-procedure_secvpfபொதுவாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக தாய் மற்றும் தந்தை என 2 பேர் இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2 தாய்கள் ஒரு தந்தை என 3 பேர் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளனர்.

ஜோர்டானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மரபணு குறைபாடு இருந்ததுள்ளது. அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய பெண்ணிடம் இருந்த மைட்டோ காண்ட்ரியா தானமாக பெற்று ஜோர்டான் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டது.

பின்னர் ஜோர்டான் பெண்ணின் கணவரின் விந்தணு கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டு கருத்தரிக்கப்பட்டது. அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. தற்போது குறித்த குழந்தை 5 மாத குழந்தையாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

இந்த முயற்சியில் அமெரிக்க வைத்திய குழு ஈடுபட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை மெக்சிகோவுக்கு வரவழைத்து உலகில் முதல்முறையாக 3 பேர் இணைந்து பெற்றெடுத்த குழந்தையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.